ஜெயங்கொண்டம், செப்.30: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் சாலை ஓரங்களில் மழை காலங்களில் ஏற்படும்மண் அரிப்பை தடுக்கும் விதமாக சாலை ஓரங்களில் மண்ணை அனைக்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அணைக்குடம் சோழமாதேவி - கோடாலிகருப்பூர் சாலையின் ஓரப்பகுதிகளில் மழைக்காலங்களில் சாலையில் விழும் மழைநீரால் புருவப்பகுதிகளில் ஏற்படும் மண் அரிப்பைத் தடுக்கும் வகையில் அரியலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர்,உத்தரவின்படி மண் அரிப்பு ஏற்படும் பகுதிகளில் மண் அனைக்கும் பணியினை நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர்கள் மற்றும் சாலைப்பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
+
Advertisement