பெரம்பலூர், அக். 29: அரும்பாவூர் பேரூராட்சியில் நடைபெற்ற வார்டு சபா சிறப்புக் கூட்டத்தில் பேரூராட்சித் தலைவர் வள்ளியம்மை ரவிச்சந்திரன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அரும்பாவூர் பேரூராட்சியில், பேரூராட்சித் தலைவர் வள்ளியம்மை ரவிச்சந்திரன் தலைமையில் வார்டு சபா சிறப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது.இந்த வார்டு சபா சிறப்புக் கூட்டத்தின் ஒரு பகுதியாக பேரூராட்சியின் ஐந்தாவது வார்டு பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களையும் புகார் மனுக்களையும் பேரூராட்சித் தலைவரிடம் அளித்தனர்.
இதில் அப்பகுதியில் சுமார் 40 வருடங்களாக வீடு கட்டி, குடியிருந்து வரும் பொது மக்கள், தங்களது வீட்டு கழிவு நீர் செல்லும் பாதையை சிலர் தடுத்து நிறுத்த முயற்சிப்பதாகவும், அதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படாமல் இருப்பதற்கு பேரூராட்சியின் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
