அரியலூர் அக்.25: பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் ஒன்பது முதல் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் ஒன்பது முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை உயர்தர பள்ளி கல்வி வழங்குவதற்காக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் , பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர், மற்றும் பழங்குடியினர் ஆகிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, இதர பிற்படுத்தப்பட்டோர் , பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த ஆண்டிற்கான தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க பட்டியிலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்திற்கான பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூ.2.50 இலட்சம், இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நாள் அக்டோபர் 31, கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபார்க்க நவம்பர் 15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுப்பித்தல் இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவியர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளத்தில் https://scholarships.gov.in என்ற இணைப்பில் சென்று பதிவு செய்து இந்த ஆண்டிற்கான விண்ணப்பத்தினை புதுப்பித்தல் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
புதியது இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள், தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் தங்களது கைப்பேசிஎண் ற்றும் ஆதார் விவரங்களை உள்ளீடு செய்தால் பதிவுசெய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு வரப்பெறும். மேற்படி பயன்படுத்தி இந்த ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து புதியது விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், பட்டியிலிடப்பட்ட பள்ளிகளின் விவரங்களை அறிந்திட தொடர்புடைய முதன்மை கல்வி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm என்ற இணையதளம் மூலம் காணலாம்.
கல்வி நிறுவனங்கள் மாணவ,மாணவியர்கள் விண்ணப்பித்துள்ள விண்ணப்பங்களை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் பரிசிலித்து அடுத்த நிலையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலருக்கு அனுப்புதல் வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளும்போது தொடர்புடைய பள்ளி தலைமை ஆசிரியர் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்தல் வேண்டும்.
இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிந்திட தேசிய கல்வி உதவித்தொகை (< https://scholarships.gov.in/ >) இணையதளத்தில் அறியலாம் என மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
