பெரம்பலூர்,அக்.25: ரேஷன் அட்டைதார்கள் கை- ரேகை பதிவு செய்யாதவர்களுக்கு சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் பெற்றுவரும் குடும்ப அட்டைகளில் இதுவரை கை- ரேகை பதிவுசெய்து கொள்ளாதவர்களுக்கு இன்று அனைத்து நியாய விலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது- மாவட்டக் கலெக்டர் மிருணாளினி தகவல். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் பெற்றுவரும் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதார்கள் தங்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கைரேகை அல்லது கருவிழிப் பதிவினை உடனடியாக நியாய விலைக் கடையில் உள்ள PoS இயந்திரத்தில் கட்டாயம் பதிவு செய்திட வேண்டும். எனவே வேலை நாட்களில் தாங்கள் பொருள் பெறும் நியாய விலைக் கடைக்கு நேரில் சென்று குடும்பத்தில் இது வரை கைரேகையைப் பதிவு செய்து கொள்ளாதவர்கள், தங்களது கைவிரல் ரேகையினை பதிவு செய்து கொள்ளலாம்.
மேற்படி, e-KYC பதிவு செய்வது தொடர்பாக இன்று (25ஆம் தேதி) சனிக்கிழமை சிறப்பு முகாம் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் நடைபெற உள்ளது. தங்களது குடும்ப உறுப்பினர்களில் இதுவரை கைரேகை அல்லது கரு விழியினை பதிவு செய்யாத நபர்கள் மேற்படி, முகாமில் பதிவு செய்து கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.பிற மாநிலம், பிற மாவட்டங்களில் வேலை நிமித்தமாக தங்கி உள்ளவர்கள் அவர்களுக்கு அருகாமையில் உள்ள நியாய விலைக்கடையில் குடும்ப அட்டை நகலுடன் சென்று கைவிரல் ரேகையினை பதிவு செய்துகொள்ளலாம். மேலும், சிறப்பு முகாம் நாட்கள் தவிர அனைத்து வேலை நாட்களிலும் நியாயவிலைக் கடைகளில் தங்களது கை-ரேகையினை பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்டக் கலெக்டர் மிருணாளினி வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
