ஜெயங்கொண்டம், செப்.24: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட 17 மற்றும் 18 ஆகிய வார்டுகளை ஒருங்கிணைத்து ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்திலும், வாரியங்காவல், இலையூர் மற்றும் புதுக்குடி ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து நாளை இலையூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெற உள்ளன. இம்முகாம்கள் குறித்த விபரங்களை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக, தன்னார்வலர்கள் கடந்த 16ம் தேதி முதல் வீடு வீடாகச் சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கி முகாம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
எனவே, மேற்கண்ட பகுதிகளில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்களில் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.