தா.பழூர், அக், 23: அரியலூர் மாவட்டத்தில் நடப்பு 2025-ஆம் ஆண்டு சிறப்பு மற்றும் ராபி பருவத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்திட தமிழக அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் பிர்கா அளவில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என அறிவித்து உள்ளனர்.
இந்த சிறப்பு திட்டத்தில் இணைவதற்கான தகுதி:
அனைத்து விவசாயிகளும் (குத்தகைதாரர் உட்பட) தங்கள் விருப்பத்திற்கேற்ப பயிர் காப்பீடு செய்யலாம்.
பயிர் காப்பீடு செய்யத் தேவையான ஆவணங்கள்:
முன்மொழிவுப் படிவம் பொது சேவை மையத்திற்கு தேவையில்லை. விண்ணப்பப் படிவம் பயிர் சாகுபடி அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல்,
பயிர் காப்பீடு கட்டணம் செலுத்தும் இடங்கள்: அரசு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகள்.
2025 சிறப்பு மற்றும் ராபி பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய பிரிமியத் தொகை மற்றும் இறுதி நாள் விபரம்.
பயிர் பிரிமியத் தொகை நெல் ஏக்கருக்கு ரூ. 577.5; காப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு ரூ.38.500, காப்பீடு செய்ய கடைசி நாள் 15.11.25 மக்காச்சோளம் ப்ரீமியர் தொகை தொகை ஏக்கருக்கு 379.5 காப்பீட்டு தொகை ஏக்கருக்கு 25,300. காப்பீடு செய்ய கடைசி நாள்15.11.25. பருத்தி பிரீமியர் தொகை ஏக்கருக்கு 558.5 கேப்டன் ஏக்கருக்கு 11,170. காப்பீடு செய்ய கடைசி நாள் 31 10 2025, நெல்-III பிரிமியர் தொகை ஏக்கருக்கு 577.5, காப்பீடு தொகை ஏக்கருக்கு 38,500, கடைசி நாள் 17.2.26. உளுந்து பிரிமியர் தொகை ஏக்கருக்கு 255, காப்பீடு செய்ய ஏக்கருக்கு 17,000 காப்பீடு செய்ய கடைசி நாள் 15-11-25, நிலக்கடலை பிரிமியர் தொகை ஏக்கருக்கு 384 காப்பீடு தொகை ஏக்கருக்கு 25600 காப்பீடு செய்ய கடைசி நாள் 31-01-26, கரும்பு பிரிமியர் தொகை ஏக்கருக்கு 1320, காப்பீடு தொகை ஏக்கருக்கு 66000, கடைசி நாள் 31-03-26
மேலும் விபரங்களுக்கு மற்றும் விரைவான சேவைகளுக்கும் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகவும்.