பெரம்பலூர் மாவட்டத்தில் பிவ, மிபிவ, சீம பிரிவினர் பிரதமரின் யாசஸ் கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: இணையத்தில் விண்ணப்பிக்க நவ.15 வரை நீட்டிப்பு
பெரம்பலூர்,அக். 23: பெரம்பலூர் மாவட்டத்தில், பிரதம மந்திரி- யாசஸ்வி கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கால அவகாசம் வருகிற நவம்பர் 15 ஆம்தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது என மாவட்டக் கலெக்டர் தமிருணாளினி தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இதர பிற்படுத்தப்பட்டோர் (பிவ / மிபிவ / சீம), பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் யாசஸ்வி கல்வி உதவித் தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட உள்ளது. 2025 - 2026 ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க பட்டியலிடப்பட்ட (Top Class Schools) பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூ2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் வரும் 31ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவியர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் புதுப்பிக்க (https://scholarships.gov.in) (National Schoalrship Portal) Renewal Application என்ற இணைப்பில் (Link) சென்று OTR Number (One Time Registration) பதிவு செய்து 2025-26 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பத்தினை புதுப்பித்தல் (Renewal) மேற்கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர், தேசிய கல்வி உதவித் தொகைத் தளத்தில் தங்களது கைப்பேசி எண் (Mobile Number) மற்றும் ஆதார் விவரங்களை உள்ளீடு செய்தால் OTR Number & Password பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு வரப்பெறும். மேற்படி, OTR Number பயன்படுத்தி 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து புதியது (Fresh Application) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், பட்டியிலிடப்பட்ட பள்ளிகளின் விவரங்களை https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm என்ற இணைய தளம் மூலம் காணாலாம். கல்வி நிறுவனங்கள் மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ள விண்ணப்பங்களை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் பரிசிலித்து அடுத்த நிலையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலருக்கு அனுப்புதல் வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளும்போது தொடர்புடைய பள்ளி தலைமை ஆசிரியர் Login Credential சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்தல் வேண்டும். கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிப்பார்க்க கால அவகாசம் வருகிற நவம்பர் மாதம் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் மிருணாளினி வெளியிட்டுள்ள அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.