ஜெயங்கொண்டம், செப்.22: ஜெயங்கொண்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது. இதுகுறித்து ஜெயங்கொண்டம் செயற்பொறியாளர் அய்யனார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது; தமிழ்நாடு மின்பகிர்மானகழகம் ஜெயங்கொண்டம் கோட்டம் சார்பாக நாளை 23ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணியளவில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் பெரம்பலூர் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வைபொறியாளர் மேகலா தலைமையில் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் சிவன்கோவில் அருகில் அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
எனவே, அதுசமயம் கோட்ட மின்நுகர்வோர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் மேற்பார்வைபொறியாளரிடம் தெரிவித்து பயனடைய வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.