பெரம்பலூர்,டிச.12: பெரம்பலூர் பிரம்ம புரீஸ்வரர் கோயிலில் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பெரம்பலூர் நகராட்சியில் துறையூர் சாலையில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் நேற்று (11ம் தேதி) வியாழக்கிழமையை முன்னிட்டு தட்சிணா மூர்த்தி சுவாமிகளுக்கு காலை 11:30 மணியளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நிகழ்வில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், ராஜா, சங்கர், ராஜ், உட்பட பெரம்பலூர், துறைமங்கலம், அரணாரை, நொச்சியம், நெடுவாசல், விளாமுத்தூர், எளம்பலூர், சிறுவாச்சூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் மற்றும் சிவனடியார்கள் கலந்துகொண்டு குரு அருள் பெற்றனர். பூஜைகளை கௌரிசங்கர் சிவாச்சாரியார் செய்துவைத்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரவிச்சந்திரன் செய்திருந்தார்.


