Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விளையாட்டு துறையில் சாதனை படைத்தவர்களுக்கு பத்ம விருதுகள்

தஞ்சாவூர், ஜூன் 28: விளையாட்டு துறையில் சாதனை படைத்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து கலெக்டர் பிரியங்கா பங்கஜம்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்குபவர்களுக்கும், சாதனை புரிந்தவர்களுக்கும் பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது.

இவ்விருதுக்கு கலை, சமூகப்பணி, பொது சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, அரசு குடிமைப்பணி, விளையாட்டு மற்றும் இதர துறைகளில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்தவர்கள் தகுதியுடைவர். பத்ம விருதுகளான பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகள் இந்திய அரசால் வழங்கப்படவுள்ளது. இவ்விருதுகள் வரும் 2026 ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ளது.

எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தில் விளையாட்டு துறையில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்தவர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்கள் பெற https://www.padmaawards.gov.in/ என்ற இணையதள முகவரி மூலம் மட்டுமே 30.06.2025க்குள் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்கள் பெற 04362-235633 என்ற தொலைபேசி எண்ணிலும் மற்றும் 7401703496 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடர்புகொண்டு விவரம் பெற்றுக்கொள்ளலாம்.