பழநி, நவ. 19: பழநி அடிவார பகுதியில் நேற்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். உணவகங்கள், பேரீட்சை, பஞ்சாமிர்தம், சிப்ஸ் போன்றவை விற்பனை செய்யும் கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டன. இதில் தரமில்லாமல் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு, கீழே கொட்டி அழிக்கப்பட்டன.
தயாரிப்பு தேதி இல்லாத, காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடைகளுக்கு ேநாட்டீஸ்கள் வழங்கப்பட்டன. மேலும் பக்தர்களுக்கு வேதிப்பொருட்கள் கலக்காத தரமான உணவுகள் வழங்கப்பட வேண்டும். தயாரிப்பு இல்லாத தின்பண்டங்கள், காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்யக்கூடாதென எச்சரிக்கப்பட்டு கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.


