ஈரோடு, டிச. 17: பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டம் இட்வசிவ்நகரை சேர்ந்தவர் சங்கர் (33). இவர்,மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஈரோடு அடுத்த சித்தோடு வாய்க்கால் மேட்டில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் மில்லிற்கு அருகே தங்கி, அதே மில்லில் மிஷின் ஆப்ரேட்டராக வேலை செய்து வந்தார். சங்கருக்கு மதுப்பழக்கம் உள்ளதால் தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை மது குடித்து வீட்டில் வாந்தி எடுத்துள்ளார்.
இதனால், சங்கருக்கும், அவரது மனைவி சாந்தாதேவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், மனவேதனை அடைந்த சங்கர் வீட்டிற்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்தோடு போலீசார் சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் தொடர்பாக சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.