ஊட்டி, டிச. 11: ஊட்டி அருகேயுள்ள கேத்தி ேபரூராட்சியில் இடம்பெற்றுள்ள பைகமந்து கிராமத்தை, தொட்டபெட்டா ஊராட்சியில் சேர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். நீலகிரி மாவட்டம், ஊட்டி முத்தோரை பாலாடா அருகே பைகமந்து என்ற கிராமம் உள்ளது. 180க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். லவ்டேல் மற்றும் முத்தோரை பாலாடா வழியாக இக்கிராமத்திற்கு செல்ல முடியும். இக்கிராம பகுதியானது குன்னூர் வட்டம், கேத்தி பேரூராட்சியில் இடம்பெற்றுள்ளது.
ஆனால், பைகமந்து கிராமமானது ஊட்டி நகருக்கு மிக அருகில் உள்ளது. இதனால், பல்வேறு பணிகளுக்காக கேத்தி பேரூராட்சிக்கு செல்ல வேண்டியுள்ளதுடன், வருவாய்த்துைற சார்ந்த பணிகளுக்காக சுமார் 20 முதல் 30 கிமீ தூரம் பயணித்து குன்னூர் ெசன்றுவர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இக்கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரேஷன் கார்டுகளுக்கான விவரங்கள் ஊட்டி வட்டத்தில் இடம்பெற்றுள்ளன. அதே சமயம் ஆதார் அட்டையில் கேத்தி, குன்னூர் வட்டம் என பதிவாகி உள்ளது. இதனால், சரியான நிரந்தர முகவரி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இக்கிராமத்திற்கு உள்ளவர்களுக்கு ஊட்டி அருகேயுள்ள முத்ேதாரை பாலாடா என குறிப்பிட்டு வரும் கடிதம் சரியாக வருகிறது. அதே சமயம் ஆதாரில் உள்ளபடி கேத்தி அஞ்சல் என குறிப்பிட்டு வரும் கடிதங்கள் வந்து சேர்வதில்லை.
மேலும், ரேஷன் அட்டை, ஆதார் அட்டைகளில் மாறுபட்ட முகவரிகளால் திருமண பதிவு உள்ளிட்ட எந்த விதமான பதிவுகளையும் மேற்கொள்ள முடிவதில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் 35 ஊராட்சிகள் 88 ஊராட்சிகளாக பிரிக்கப்பட்டு 96 ஊராட்சிகளாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், கேத்தி பேரூராட்சியில் இடம்பெற்றுள்ள பைகமந்து கிராமத்தை பிரித்து அதனை ஊட்டி வட்டாரத்தில் உள்ள தொட்டபெட்டா ஊராட்சியுடன் சேர்க்கும் பட்சத்தில் மேற்கண்ட பிரச்னைகளுக்கு நிரந்தரதீர்வு கிடைக்கும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுதொடர்பாக நேற்று பைகமந்து ஊர் பொதுமக்கள், மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
பைகமந்து கிராமத்தில் சுமார் 180 குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம். எங்கள் ஊர் குன்னூர் வட்டத்திலும், கேத்தி பேரூராட்சியிலும் இடம்பெற்றுள்ளது. சில குடும்பங்கள் மட்டும் தொட்டபெட்டா ஊராட்சியில் இடம்பெற்றுள்ளனர்.
எங்கள் கிராமத்திற்கு உட்பட்ட சுமார் 80 ஏக்கர் நிலம் தொட்டபெட்டா ஊராட்சியிலும், மீதமுள்ள பகுதிகள் கேத்தி பேரூராட்சியிலும் வருகிறது. சட்டமன்ற தொகுதி வாக்கு குன்னூர் வட்டத்திலும், நாடாளுமன்ற தொகுதி வாக்கு ஊட்டி வட்டத்திலும் உள்ளது. ஆதார் அட்டையில் குன்னூர் எனவும், ரேஷன் அட்டையில் ஊட்டி எனவும் குளறுபடிகள் உள்ளன.
இப்பிரச்னைகளுக்கு தீர்வுகாண கோரி கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு செய்தோம். தீர்வு காணப்படும் என்ற அதிகாரிகளின் உறுதியை ஏற்று தேர்தலிலும் வாக்களித்தோம். ஆனால் உறுதியளித்தபடி அதிகாரிகள் ெசய்து தரவில்லை. தற்போது நீலகிரியில் ஊராட்சிகள் அதிகரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், எங்களது கோரிக்கைகளை ஏற்று பைகமந்து கிராமத்தை தொட்டபெட்டா ஊராட்சியுடன் சேர்க்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.


