மஞ்சூர், செப்.16: மஞ்சூரில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குந்தா கிழக்கு ஒன்றியம் கீழ்குந்தா பேரூராட்சி அதிமுக சார்பில் மஞ்சூரில் அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பேரூராட்சி செயலாளர் சிவராஜ் தலைமை தாங்கினார். அவை தலைவர் துரைசாமி, அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணை செயலாளர் கோபாலன், கலை பிரிவு மாவட்ட துணை செயலாளர் பாலசந்திரன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சரவணன், பாசறை செயலாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள் ரங்கன், லிங்கன், கிருஷ்ணன், தேவன், ரவிக்குமார், ரமேஷ், விஸ்வநாதன், கார்த்திகேயன், அல்லி அர்ஜூணன், திலிப்குமார், பக்தவச்சலம், சுந்தரன், மணியன், லிங்கன், ராமன், கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.