பாலக்காடு, செப்.16: பாலக்காடு மாவட்டம் பட்டஞ்சேரியில் மளிகை கடையில் தீப்பிடித்து பொருட்கள் நாசமடைந்தன.
பாலக்காடு மாவட்டம் வண்டித்தாவளம் அருகே பட்டஞ்சேரியில் கிஷோர் (45) மளிகை கடை நடத்தி வருகின்றார். கடையின் மேல் மாடியில் தாய் ராஜாலட்சுமி மற்றும் மகன் கிஷோர் ஆகியோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை பொள்ளாச்சிக்கு மளிகை பொருள் வாங்க கிஷோரின் தந்தை மோகனன் சென்றுள்ளார். அப்போது, மளிகை கடையிலிருந்து புகை கிளம்பியுள்ளது. இதனைப்பார்த்த அக்கம் பக்கத்துக் கடைக்காரர்கள் சன்சேடு மேல் ஏறி கயிறு மூலம் ராஜா லட்சுமியை காப்பாற்றினர். இதற்கிடையில் கடையிலுள்ள பொருட்கள் அனைத்துமே தீயில் கருகி சாம்பலாயின.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சித்தூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மற்ற கடைகளுக்கு தீ பரவாமல் தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து புதுநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.