பந்தலூர், அக்.14: பந்தலூரில் புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பந்தலூர் பஜாரில் புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் நேற்று முன்தினம் கீழடி தமிழர் தாய்மடி, சனாதான புரட்டலுக்கு பேரிடி, ஒன்றிய அரசே தமிழர் தொன்மை வரலாற்றை நிறுவும் கீழடி அகழ்வாய்வு அறிக்கையை உடனே வெளியிடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இளங்கோவன் தலைமை வகித்தார். இந்திய பொதுவுடைமை கட்சி பந்தலூர் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், விசிக மாவட்ட செயலாளர் புவனேஷ்வரன் மற்றும் சாதிக்பாபு, அப்துல்பஷீர், மூர்த்தி, மலரவன், மாரிமுத்து, கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். கருப்பர் கலைக்கூடம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.