ஊட்டி, அக்.11: தாயுமானவர் திட்டத்தின் கீழ் சினையுற்ற கறவை பசுக்களுக்கு ஊட்டச்சத்து பெற கூடலூர் சுற்று வட்டார கால்நடை வளர்ப்போர் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியிருப்பதாவது:
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ஊரக ஏழை கால்நடை விவசாயிகளின் சினையுற்ற கறவை பசுக்களுக்கு 50 சதவீத மானியத்துடன் ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 100 ஊரக ஏழை கால்நடை விவசாயிகளின் சினையுற்ற கறவை பசுக்களுக்கு 50 சதவீத மானியத்துடன் ஊட்டச்சத்து (அடர் தீவனம், தாது உப்புகள் மற்றும் விட்டமின்) வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.