கோத்தகிரி,அக்.11: கோத்தகிரி காங்கிரஸ் கட்சியின் சார்பில் எங்கள் வாக்குகள் திருடுவதை உடனடியாக நிறுத்துங்கள் என்று பாஜ அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நேற்று கோத்தகிரி நகர் பகுதிகள் மற்றும் கோத்தகிரி பஜார், பள்ளிவாசல், ராம்சந்த் பகுதி பள்ளிவாசல், கோத்தகிரி பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.
இந்த நிகழ்வானது கோத்தகிரி காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் சில்லபாபு, கோத்தகிரி நகர தலைவர் காதி வேலுச்சாமி தலைமையிலும், பிசிசி உறுப்பினர்கள் பில்லன், கமலா சீராளன், ஒ.பி.சி. மாவட்ட தலைவர் ஜக்கனாரை ராஜீ, மாவட்ட செயளாளர் சுண்டட்டி மணி, லியாகத் அலி, கீழ்கோத்தகரி வட்டார தலைவர் பில்லகுமார், கேசவன் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் சேலக்கொரை பெள்ளி, மிளிதேன் சிறுபான்மை தலைவர் சாந்து வாத்தியார், ஜக்கனாரை ஷீலா கண்ணன், செய்தி தொடர்பாளர் சந்திரசேகர் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.