பந்தலூர், அக்.10: பந்தலூர் அருகே தேவாலா கரியசோலை சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே தேவாலாவில் இருந்து கரியசோலை மற்றும் ராக்வுட், நெலாக்கோட்டை செல்லும் சாலை நெலாக்கோட்டை அருகே நேற்று சாலையோரத்தில் இருந்த மரம் ஒன்று வேறுடன் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் அப்பகுதி பொதுமக்கள் சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். அதன்பின் நெலாக்கோட்டை, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு பேருந்து மற்றும் பிற வாகனங்கள் சென்றது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.