ஊட்டி, அக்.10: மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 13ம் தேதி அதிகரட்டி, சேலாஸ் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. அதிகரட்டி துணை மின் நிலையத்தில் வரும் 13ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதன்படி அதிகரட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட அதிகரட்டி, பாலகொலா, தேவர்சோலை, காத்தாடிமட்டம், நுந்தளா, தாம்பட்டி, மணியட்டி, நான்சச், ஆருகுச்சி, உலிக்கல், மேலூர், மஞ்சக்கொம்பை, கிளிஞ்சடா, சேலாஸ், பாரதி நகர், தூதூர்மட்டம், கரும்பாலம், கிளன்டேல், கொலக்கொம்பை, பென்காம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சேகர் தெரிவித்துள்ளார்.
+
Advertisement