ஊட்டி, அக். 12: ஊட்டியில் உள்ள கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் புவநேந்திரன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் சிவப்ெபருமாள் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இணை செயலாளர் ராமூர்த்தி முன்னிைல வகித்தார். கோத்தகிரி வட்ட கிளை தலைவர் முருகன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில், ‘‘சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற மேல்முறையீட்டினை திரும்ப பெற வேண்டும். கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், சாலை பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கிட வேண்டும். சாலை பணியாளர்களுக்கு ஊதிய மாற்றம் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.இதில் மாவட்ட பொருளாளர் கனகரத்தின் நிறைவுரையாற்றினார். இதில், ஏராளமான சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement