பந்தலூர், அக்.31: பந்தலூர் அருகே குந்தலாடி பகுதியில் புதுப்பிக்கப்பட்ட அரசு துணை சுகாதார நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட குந்தலாடி கிராமத்தில் புதுப்பிக்கப்பட்ட அரசு துணை சுகாதார நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சார்பில் ரூ.16.70 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட அரசு ஆம்பா சுகாதார நிலையத்தை மருத்துவர் மாசிலாமணி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கூடலூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் சற்குணசீலன் மற்றும் அரசு மருத்துவர்கள், சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கள பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
 
  
  
  
   
