ஊட்டி, ஆக. 27: நீலகிரி மாவட்டம், ஊட்டி காந்தல் பகுதியில் நகராட்சி நூலகம் மற்றும் அறிவுசார் மையம் உள்ளது. இந்த மையத்தில் தமிழியக்கம் அமைப்பு சார்பில் குழந்தைகளுக்கான கதைச்சொல்லி நிகழ்ச்சி நடந்தது. நூலகர் அசினா வரவேற்றார்.
தமிழியக்கம் தலைவர் அமுதவல்லி, தமிழியக்கம் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் ரமணா, அண்ணாமலை பல்கலைக்கழகம் பதிவாளர் (ஓய்வு) நடராஜன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.தமிழியக்கம் மாணவர் அணி பொறுப்பாளர் சுதிர், சுபாசந்தர் ஆகியோர் மாணவ, மாணவியருக்கு எழுதுகோல் வழங்கினர். நாகராஜ், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார். முடிவில் ஜபார் நன்றி கூறினார்.