ஊட்டி, ஆக. 20: நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் ஊட்டி, கூடலூர், பந்தலூர், தேவாலா, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மழை குறைந்து காணப்பட்டது.
அதே சமயம் மாலை நேரத்தில் வீசிய பலத்த காற்றுக்கு தாக்குபிக்கமுடியாமல் ராட்சத கற்பூர மரம் முறிநூத விழுந்து ஊட்டி தேனிலவு படகு இல்லத்தின் நுழைவு வாயில் மற்றும் கட்டணம் வசூலிக்கும் கூரைகள் மீது சேதமடைந்தது. இதனால் தேனிலவு படகு இல்லம் தற்காலிகமாக மூடப்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மரத்தினை வெட்டி அகற்றி அப்புறப்படுத்தினர்.