ஊட்டி, செப். 19: நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் கே.எம்.ராஜூ கூறியிருப்பதாவது: நீலகிரி எம்பி மற்றும் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, நாளை 20ம் தேதி காலை 10.30 மணியளவில் ஊட்டியில் உள்ள தமிழகம் அரசு விருந்தினர் மாளிகை அரங்கில் வனத்துறை அதிகாரிகளுடன் நடக்கும் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து, நீலகிரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
பிற்பகல் 3 மணிக்கு மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட மைதானத்தில் முதலமைச்சர் கோப்பைகான போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார். மாலை 4.30 நீலகிரி மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். 21ம் தேதி காலை 10.30 மணிக்கு நீலகிரி எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கீழ் கோத்தகிரி குயின்சோலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிழற்குடையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து, கீழ்கோத்தகிரி ஒன்றியம் சார்பில் நடக்கும் முப்பெரும் விழாவில் கலந்து கொள்கிறார்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பகல் 12.30 மணிக்கு கோத்தகிரியில் நீலகிரி மாவட்டத்திற்கான வார் ரூம் திறந்து வைக்கிறார். முன்னதாக, நாளை 20ம் தேதி ஊட்டியில் நடக்கும் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகிகள், தலைமை கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், உள்ளாட்சி தலைவர்கள், முன்னாள் தலைவர்கள் வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரும் கலந்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.