கோத்தகிரி, அக்.17: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில் நேற்று காலை முதல் கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டு வந்தது. இந்நிலையில் காலை முதல் சாரல் மழை பெய்து வந்த நிலையில் பிற்பகல் வேளையில் கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளான அரவேனு, கட்டபெட்டு, ஒரசோலை, கைக்காட்டி, கீழ் கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.
கனமழையின் காரணமாக காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு குளிர் நிலவி வருகிறது. மேலும் தாழ்வான பகுதிகளான நகர் பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து மழையின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் சாலையோர வியாபாரிகள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.