பாலக்காடு, செப்.17: கேரள மாநிலம் அதிரப்பள்ளி-மலக்கப்பாறை சாலையில் கபாலி என்ற காட்டு யானை வாகனங்களை வழிமறித்ததால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர். திருச்சூர் மாவட்டம் சாலக்குடி வழியாக அதிரப்பள்ளி, மலக்கப்பாறை மற்றும் வால்பாறை ஆகிய சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் நாள்தோறும் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
காட்டு வழி சாலையில் அடிக்கடி வன விலங்குகளின் நடமாட்டமும் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிரப்பள்ளி - மலக்கப்பாறை சாலையில் கபாலி என்ற காட்டுயானை வாகனங்களை வழிமறித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் சாலையிலே வாகனங்களை நீண்ட வரிசையில் நிறுத்தி காத்து கிடந்தனர். இந்த சம்பவத்தால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர்.