ஊட்டி, அக். 16: ஊட்டி அருகேயுள்ள மசினகுடி மற்றும் கார்குடி உண்டு உறைவிட பள்ளிகளில் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஊட்டி அருகே மசினகுடி தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் குழந்தைகளின் கல்வித்திறன், வகுப்பறைகள் மற்றும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்புக்குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கார்குடி உண்டு உறைவிட தொடக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தினை ஆய்வு செய்தார். தொடர்ந்து, குழந்தைகளுக்கு உணவு வழங்கி, அவர்களுடன் கலந்துரையாடி உணவு உட்கொண்டார். இந்த ஆய்வின் போது, கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சலீம், மசினகுடி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முனுசாமி, கார்குடி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.