கோவை, நவ. 15: திருப்பூர் மாவட்டம் அமராவதி ஆற்றில் உள்ள 6 பழைய ராஜவாய்க்கால்களின் (குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர் மற்றும் காரத்தொழுவு) 4,686 ஏக்கர் பாசன நிலங்களின், 2025-2026ம் ஆண்டு, இரண்டாம் போக பாசனத்திற்காக, அமராவதி ஆற்று மதகு வழியாக 15.11.2025 (இன்று) முதல் 28.02.2026 வரை 105 நாட்களில், 40 நாட்கள் தண்ணீர் திறப்பு, 65 நாட்கள் தண்ணீர் நிறுத்தம் என்ற அடிப்படையில், வினாடிக்கு 200 கன அடி வீதம் 691.20 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தகுந்த இடைவெளி விட்டு, அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேற்கண்ட தகவலை தமிழக அரசின் நீர்வளத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.
+
Advertisement
