பந்தலூர்,செப்.15: பந்தலூர் ப்யூச்சர் மஹால் திருமண மண்டபத்தில் நெல்லியாளம் நகர பாகநிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம் நகர செயலாளர் சேகர் தலைமையில் நடைபெற்றது. மாநில பொறியாளர் அணி துணை அமைப்பாளர் கூடலூர் சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளர் பரமேஸ்குமார் கலந்து கொண்டு பாகநிலை முகவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ மற்றும் தலைமை கழக செயற்குழு உறுப்பினர் திராவிடமணி, தலைமை கழக செயற்குழு உறுப்பினர் காசிலிங்கம்,பொதுக்குழு உறுப்பினர் அமிர்தலிங்கம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் முரளிதரன், நகர்மன்ற தலைவர் சிவகாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர துணை செயலாளர்கள் ஷீலா செல்வகுமார், பொருளாளர் தென்னரசு, மாவட்ட பிரதிநிதிகள் ராமசந்திரன்,குமார் மற்றும் மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஜெயசீலன், ஞானசேகர், உ.ஞானசேகர், சந்திரகுமார், இன்பராஜ் மாவன்னாதுறை, பன்னீர்செல்வம், ஸ்ரீராம், முகமது, கூடலூர் சட்டமன்ற தொகுதி ஐடிவிங் அமைப்பாளர் பாலா, நகர ஐடிவிங் தியாகு மற்றும் பாகநிலை முகவர்கள் வார்டு செயலாளர்கள் கலந்து கொண்டனர்.