மஞ்சூர், ஆக.15: மஞ்சூர் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் கலைத் திருவிழா போட்டிகள் துவங்கியது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு அரசு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டுக்கான கலைத் திருவிழா போட்டிகள் துவக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் பாபி குத்து விளக்கு ஏற்றி போட்டிகளை துவங்கி வைத்தார்.
இதில் ஓவியம், பேச்சு, கவிதை, தனிநபர் நடிப்பு, நாட்டுப்புற பாடல் போட்டி, வில்லுப்பாட்டு, பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், இசை போன்ற போட்டிகள் நடத்தப்படுகிறது. கோலம், டான்ஸ் போட்டிகளும் நடைபெறுகிறது. இதில் பொறுப்பாசிரியர்கள் ராஜ்மோகன் கவிதா, ரேஷ்மா, சங்கீதா, கிரண், சவிதா, எலிசபெத் ஆகியோர் கலந்து கொண்டார்கள். விழா ஏற்பாடுகளை பொறுப்பாசிரியர் சகாய்தாஸ் செய்திருந்தார்.