ஊட்டி, ஆக. 14: கோத்தகிரி புளூமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க மாதாந்திர செயற்குழு கூட்டம் நடந்தது. தலைவர் வாசுதேவன் தலைமை வகத்தார். பொருளாளர் மரியம்மா, துணை தலைவர்கள் செல்வராஜ், ஜெயந்தி முகமது இஸ்மாயில், யசோதா செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் அமைப்பின் கடந்த மாத செயல்பாடுகள் மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து பேசினார்.
தொடர்ந்து கோத்தகிரியில் உள்ள என்சிஎம்எஸ். மண்டபத்தை புதுப்பித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கோத்தகிரி தாலுகா அளவில் ரேஷன் கடைகளுக்கு நியமிக்கப்பட்ட விஜிலென்ஸ் கமிட்டி உறுப்பினர்களின் கூட்டம் முறையாக நடத்த வேண்டும். கோத்தகிரியில் மின்சார கம்பங்களில் கட்டப்பட்டுள்ள தனியார் நிறுவனங்களின் கேபிள் வயர்களை முறை படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.