ஊட்டி, செப்.13: கோத்தகிரியில் இன்று நடக்கும் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் அமைப்பு சாரா தொழிலாளர்களும் மருத்துவ பரிசோதனை செய்து ெகாள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) லெனின் கூறியிருப்பதாவது: நலன் காக்கும் ஸ்டாலின் சிறப்பு உயர் மருத்துவ சேவை முகாம் இன்று (13ம் தேதி) நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டாரத்தில் கேர்கம்பை பகுதியில் உள்ள ஹில்போர்ட் மேல்நிலை பள்ளியில் நடைபெற உள்ளது.
இம்முகாமில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.எனவே அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு பெற்ற கோத்தகிரி பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று பயனடையலாம்.