கோத்தகிரி, செப். 12: கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. வானிலை ஆய்வு மையம் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும் என அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளான கட்டபெட்டு, அரவேனு, எஸ்.கைக்காட்டி, கீழ் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
மழையின் காரணமாக காலநிலையில் மாற்றம் ஏற்ப்பட்டு குளிர் நிலவியது. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், மலைப்பாதையில் பயணம் மேற்கொண்டவர்கள் தங்களின் பணி சார்ந்த நடவடிக்கைகளை குளிரில் மேற்கொண்டனர். தொடர்ந்து மாலை நேரத்திலும் மழையின் தாக்கம் காணப்பட்டதால் பள்ளி, கல்லூரி சென்று வீடு திரும்பிய மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.