மேட்டுப்பாளையம், செப்.11: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள வன பத்ரகாளியம்மன் கோயில் பவானி ஆற்றில் நேற்று இளம்பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். அப்போது, அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த லைப் கார்ட்ஸ் போலீசார் அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர். போலீசாரின் விசாரணையில் 28 வயதுள்ள காரமடையை சேர்ந்த அந்த பெண், குடும்பத்தகராறு காரணமாக தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
இதனையடுத்து அவரது கணவரை வரவழைத்த போலீசார் அறிவுரைகளை வழங்கி அனுப்பி வைத்தனர். இதேபோல முதியவர் ஒருவர் பவானி ஆற்றில் குறித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரையும் பத்திரமாக மீட்ட லைப் கார்ட்ஸ் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு அவரையும் உறவினர்களை வரவழைத்து அறிவுரை வழங்கி போலீசார் அனுப்பி வைத்தனர்.