பந்தலூர்,ஆக.11: பந்தலூர் அருகே தேவாலா பஜாரில் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தேவாலா கமிட்டி தலைவர் சவுக்கத் அலி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளது அதற்கு பாஜக உடந்தையாக இருப்பதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
பொதுக்குழு உறுப்பினர் கோபிநாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட விவசாய அணிதலைவர் அபிவண்ணன், மாவட்டச் செயலாளர் அனீஸ் பாபு, நெல்லியாளம் நகரப் பொதுச் செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் மாவட்டச் செயலாளர் பிரபு,நகர பொருளாளர் ஜோணி,கவுன்சிலர்கள் சூரியகலா, விஜயலட்சுமி அருணாச்சலம். நிர்வாகிகள் கோவிந்தராஜ், சந்திரன், அந்தோணி அசரப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.