ஊட்டி, செப். 10: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே குந்தை சீமை படுகர் நல சங்க நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான சிறப்பு பொதுக்குழு கூட்டம் மஞ்சூரில் நடந்தது. கூட்டத்திற்கு, குந்தை சீமை சின்ன கணிக்கே போஜாகவுடர் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதற்கான ஒப்புதலை பார்பத்தி அன்னமலை முருகேசன் அளித்தார். அதன்படி, குந்தை சீமை படுகர் நல சங்க தலைவராக கீழ்குந்தா கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் கே.ஐ., சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக என்.சிவக்குமாரும், துணைத் தலைவர்களாக ஆரி, சரவணன், இணை செயலாளர்களாக தேவராஜ், ஏ.சரவணன், பொருளாளராக தீபக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.