ஊட்டி, அக். 9: ஊட்டி ரோஜா பூங்கா வளாகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய மதி அங்காடி மற்றும் விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. விழாவில் அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். நீலகிரி எம்பி., ஆ.ராசா திறந்து வைத்து பார்வையிட்டார். இதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமான உதகை ரோஜா பூங்காவில் 120 சதுர அடி அளவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவி குழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக மதி அங்காடி மற்றும் விற்பனை மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பினை மகளிர் சுய உதவி குழுக்கள் பயன்படுத்தி வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும். என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மகளிர் திட்ட இயக்குநர் ஜெயராமன், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் உதவி திட்ட அலுவலர் ஜெயராணி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் பாசில், ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தரன், அனிதா உட்பட ப
+
Advertisement