பந்தலூர், செப். 9: பந்தலூர் அருகே சேரம்பாடி காப்பிக்காடு பகுதியில் சாலையோரத்தில் உள்ள ஆபத்தான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது. இந்த பணியால் தமிழக- கேரள போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், பந்தலூரில் இருந்து சேரம்பாடி மற்றும் கேரளா மாநிலம், வயநாடு பகுதிக்கு செல்லும் நெடுஞ்சாலை சேரம்பாடி காப்பிக்காடு பகுதியில் சாலையோரத்தில் ஆபத்தான நிலையில் இருந்து வந்த மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கோட்டாட்சியர் உத்தரவின்பேரில் நேற்று நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் ஆபத்தாக இருந்து வந்த மரங்களை வெட்டி அகற்றினர். அதனால் சுமார் அரை மணி நேரம் இருமாநில போக்குவரத்தும் பாதிப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் அதிகாரிகள் போக்குவரத்தை சீரமைத்தனர்.