பந்தலூர், செப். 9: பந்தலூர் அருகே சேரம்பாடி சுங்கத்தில் பிஎஸ்என்எல் தொலைதொடர்பு டவர் உள்ளது. இதில், 2 பேட்டரிகள் திருட்டுபோனது. இதுகுறித்து கூடலூர் உட்கோட்ட பொறியாளர் சைபு தாமஸ் சேரம்பாடி போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், சேரம்பாடி பகுதியை சேர்ந்த திவாகரன் (28), பேட்டரிகளை திருடி அன்வர் (35) என்பவரிடம் விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரிகளை பறிமுதல் செய்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.