பவானி, அக். 8: அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூர், எம்ஜிஆர் நகரில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அம்மாபேட்டை போலீசார், சந்தேகமளிக்கும் வகையில் நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனர். சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கருங்கல்லூரை சேர்ந்த அண்ணாதுரை (44), என்பதும், அவரிடமிருந்து, 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த தங்கமணி (48), தப்பி ஓடிவிட்டார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இச்சம்பவம் நடைபெற்றது. கடந்த ஓராண்டுக்கு மேலாக போலீசார் தங்கமணியை தேடி வந்த நிலையில் குருவரெட்டியூர் பகுதியில் நேற்று நடமாடுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், குருவரெட்டியூர் விரைந்த போலீசார் கஞ்சா வழக்கில் தேடப்பட்டு வந்த தங்கமணியை கைது செய்தனர்.