பாலக்காடு, நவ. 7: குருவாயூர் கிருஷ்ணர் கோயிலின் 2026ம் ஆண்டு டைரி வெளியிடும் விழா, நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தேவஸ்தான சேர்மன் விஜயன், கோயில் தந்திரி தினேஷன் ஆகியோர் டைரியை வெளியிட்டனர். தேவஸ்தான நிர்வாகக்குழு உறுப்பினர்களான மல்லிச்சேரி பரமேஸ்வரன், மனோஜ், விஸ்வநாதன், சுரேஷ்குமார், மக்கள் தகவல் தொடர்புத்துறை அதிகாரி விமல்நாத் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த டைரியில் குருவாயூர் கோயில் விஷேசங்கள், வழிபாட்டு கட்டணங்கள், நடை திறந்து செயல்படும் நேரங்கள், விஷேச பூஜைகள், ரயில் நேரங்கள், அவசரகால மொபைல் எண்கள், காவல் நிலைய எண்கள், கேரள அரசுபஸ்கள் வந்து செல்கின்ற நேரங்கள் ஆகியவை விரிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
