குன்னூர், நவ. 7: நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே ஜெகதளா கிராமத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இருப்பினும் அருவங்காடு பகுதியிலிருந்து ஜெகதளாவிற்கு செல்லும் சாலை குறுகலான சாலை என்பதால் அப்பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது.
இதனிடையை அந்த சாலையில் பல்வேறு இடங்களிலில் குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை இயக்க முடியாமல் திணறி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் அப்பகுதியில் உள்ள சாலைகளை முறையாக ஆய்வு செய்து சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
