பந்தலூர், நவ. 7: பந்தலூர் அருகே ஆமைக்குளம் கல்லூரி அருகே முட்புதர்கள் சூழ்ந்து காணப்படும் நிழற்குடையை சீரமைக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பந்தலூர் அருகே நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட ஆமைக்குளம் பகுதியில் பயணிகள் நிழற்குடை நெல்லியாளம் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிழற்குடையில் தினந்தோறும் கல்லூரியில் மாணவர்கள், பொதுமக்கள் அமர்ந்து பேருந்துகளில் பயணித்து வருகின்றனர்.
பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்ட காலம் முதல் இதுவரை பயணிகள் நிழல் குடையை பராமரிக்காமல் இருந்து வருவதால் நிழற்குடையின் மேல்பகுதி முழுவதும் முட்கள் சூழ்ந்து பயணிகள் அமர்ந்து செல்வதற்கு முடியாமல் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் பயணிகள் நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
