கோத்தகிரி, ஆக. 7: கோத்தகிரி நகர் பகுதியில் தற்போது நாளுக்கு நாள் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பேருந்து நிலையம், மார்க்கெட், காமராஜர், இந்தியன் வங்கி அருகே உள்ள பிரதான சாலைகள், குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளில் உலா வருவது தொடர்கதையாக உள்ளது.
அவ்வாறு உலா வரும் குரங்குகள் குடியிருப்புகளின் மேற்கூரையில் அமர்ந்து குடிநீர் தொட்டிகள், குழாய்களை சேதப்படுத்துவது, துணிகள் காய வைத்திருந்தால் அவற்றை இழுத்து செல்வது, சாலையில் பொதுமக்கள், குழந்தைகள் உணவு பொருட்களை வாங்கி வந்தால் அவற்றை பிடுங்கி பொதுமக்களை தாக்கும் நோக்கில் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. எனவே வனத்துறையினர் கோத்தகிரி நகர் பகுதியில் உலா வரும் குரங்கு கூட்டத்தை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.