பாலக்காடு, நவ.5: பட்டாம்பி அருகே ஓங்கல்லூர் பகுதியில் அமைந்துள்ள குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அருகே ஓங்கல்லூர் கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமப்பகுதிகளில் வீடுகளிலிருந்து சேகரிக்கக்கூடிய பொருட்களை குடோனில் சேகரித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், அந்த குடோனில் நேற்று முன்தினம் மாலை எதிர்பாராதவிதமாக மின்கசிவு ஏற்பட்டு தீ படர்ந்துள்ளது. தொடர்ந்து, அப்பகுதியிலுள்ள குடும்பத்தினர் உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். பின்னர் தகவலறிந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் படர்ந்து எரிந்த தீயை பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
