கூடலூர்,அக்.4: கூடலூர் திமுக ஒன்றியத்திற்கு உட்பட்ட மசினகுடி,ஸ்ரீமதுரை,முதுமலை,முதுகுழி ஆகிய பகுதிகளில் அனைத்து பூத்களிலும் திமுக பாக முகவர்கள் மற்றும் பாக நிலை குழு உறுப்பினர்களுக்கான கலந்தாலோசனை முகாம்கள் அந்தந்த பகுதிகளில் நடைபெற்றது.
கூடலூர் ஒன்றிய செயலாளர் உத்தமன் தலைமையில் நடைபெற்ற முகாம்களில் மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் மற்றும் கூடலூர் சட்டமன்றத் தேர்தல் பார்வையாளர் பரமேஷ்குமார் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.உடன் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் திராவிட மணி, காசிலிங்கம்,நெல்லியாளம் நகர்மன்ற உறுப்பினர் பன்னீர்,ஒன்றிய நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள்,துணை அமைப்பாளர்கள்,கிளை கழக செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.