அந்தியூர், அக். 4: அந்தியூர் அருகே உள்ள அத்தாணி ரேடியோ ரூம் வீதியை சேர்ந்தவர் மாதேஸ் வரன் (49), கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இவர், அத்தாணி பாடசாலை வீதி அருகே பவானி ஆற்றில் குளித்து கொண்டு இருந்தார்.
அப்போது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததால் தண்ணீருக்குள் மூழ்கி பலியானார். இதுகுறித்து, மாதேஸ்வரனின் 2வது மனைவி ராதாமணி (47) அளித்த புகாரின்பேரில் ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.