சூலூர், அக்.29: கோவை மாவட்டம் சூலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் ஸ்ரீதரன் என்பவர் கோழிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
கடந்த 21ம் தேதி இரவு இவரது கடையில் கூரையை பிரித்து உள்ளே இறங்கிய 3 பேர் கடையில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கோழிகளை திருடி சென்றனர். இது தொடர்பாக தரன் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். திருடர்கள் வீட்டின் கூரை மீது ஏறி திருடும் சிசிடிவி வீடியோ வைரலான நிலையில் போலீசார் திருட்டில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக நேற்று சூலூர் மதியழகன் நகர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் மகாமணி (21), வீரமணி என்பவரது மகன் வெங்கடேஷ் (27) ஆகிய 2 பேரை கைது செய்து 2 பேரையும் சிறையில் அடைத்தனர்.
