ஊட்டி, அக். 29: நீலகிரி மாவட்ட தமிழ்த்தென்றல் கலைக்குழு, ஊட்டி ஒய்எம்சிஏ, ஆகியவை சார்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.
எழுத்தாளர் ஹீரா, ஒய்எம்சிஏ, செயலாளர் மேக்ஸ் வில்யர்ட் ஜெயபிரகாஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். மாணவர்களின் எதிர்கால நல்வாழ்விற்கு துணை நிற்பது பெற்றோர்களா? ஆசிரியர்களா? என்ற தலைப்பில் பட்டடி மன்றம் நடைபெற்றது. கவிஞர்கள் நீலமலை ஜேபி, ஜெனித்தா, ரமேஷ், சந்திரசேகர், நடராஜமூர்த்தி, சித்ரா உமேஷ் ஆகியோர் உரையாற்றினர். பட்டிமன்ற நடுவராக கிருஷ்ணராஜ் பேசினார். தொடர்ந்து இசைக்கலைஞர்கள் பஞ்சாபகேசன், டோமனிக், அசோக்குமார், ஸ்டேன்லி ஆகியோரின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. மலைச்சாரல் கவியரங்க செயலாளர் பிரபு நன்றி கூறினார்.
